மோடி அமைச்சரவையில் யார் இந்த ஜெய்சங்கர்?

Posted In: Hats Off Social

Topic No: 3

Sun Jun 02, 2019 5:12 pm#1
avatar
Hats Off
Star Member
ஆளும் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத நிலையில் கேபினட் அமைச்சரானது எப்படி? இவருக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்.

மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவிதான். காரணம் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இவர் உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர்.

1955-ம் ஆண்டுபிறந்த இவர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜெய்சங்கரின் மனைவி பெயர் கியாகோ இவர்களுக்குத் துருவா, அர்ஜுன், மேத்தா என 3 குழந்தைகள் உள்ளனர்.

ஜெய்சங்கரின் கல்விக் காலம் முழுவதும் டெல்லியில்தான். இவர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார். பின்னர் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரக செயலாளராக 1985 முதல் 1988 வரை பணிசெய்தார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றினார்.

இது தவிர இந்தியாவின் வெளியுறவுத்துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். இந்தக் காலங்களில் இருநாடு உறவுகளில் அதிக கவனம் எடுத்து கொண்ட நபர் ஜெய்சங்கர். இவரது செயல்பாடு காரணமாக அவ்வப்போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பட்டியலில் இவரது பெயர் அடிபடும்.

2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆனார். தற்போது வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக அதிக காலம் பணியாற்றிய நபர் ஜெய்சங்கர் தான். சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் இவரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை வரும்போதெல்லாம் இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெறும். அதைச் சிறப்பாகவும் செய்திருக்கிறார். சீனாவுக்கான இந்தியத் தூதராகச் செயல்பட்ட காலத்தில் தான் மோடிக்கும் இவருக்கும் நட்பு தொடங்குகிறது. அது தான் தொடக்கம்

அப்போது மோடி குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் மாநில வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்காக, மோடி அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம்.  ஆனால் காங்கிரஸ் சூழ்ச்சியால் மோடி அமெரிக்கா வர விசா மறுப்பு செய்யப்பட்டதாக அப்போதிருந்த காங்கிரஸ் அரசு கூறி விட்டது. உடனே மோடி அவர்கள்  சீனாவுக்கு விஜயம் செய்கிறார். அப்போது இந்தியாவிலிருந்து வரும் முதல்வர் என்கிற முறையில் மோடியை வரவேற்கச் செல்கிறார் சீனாவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர். மோடி - ஜெய்சங்கர் சந்தித்தது அதுவே முதன்முறை.

வெளிநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக ஜெய்சங்கரின் பணிகள், மோடியைப் பிரமிக்க வைக்கின்றன. சீனப் பயணத்தை முடித்து கொண்டு, இந்தியா திரும்பி விட்டார் மோடி. ஆனாலும் ஜெய்சங்கர், மோடியின் மனதிலிருந்து அகலவில்லை. இவர்கள் இருவருக்குமான உறவு அதன் பின்னரும் தொடர்ந்தது.

அதன் பின்னர், ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டார். அதற்கு அடுத்த வருடம் 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகிறார் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் பிரதமராகவே நுழைகிறார். அதன் பிறகு தான் மோடி அவர்களுக்கு தடை என்று ஓன்று கிடையாது காங்கிரஸ் செய்த மாயை என்று தெரிகிறது  

பிறகு அமெரிக்கா செல்கிறார் மோடி. அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை உரையாற்ற வைத்துவிட வேண்டும் என்ற சவாலான பணியைச் செய்து முடித்தவர் இந்த ஜெய்சங்கர். அன்று மோடியின் மனதில் இடம் பிடித்தவர்,  இப்போது அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய - அமெரிக்க உறவு பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப வைத்தார். அதன் பின்னர், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவி வந்தது. 2015-ம் ஆண்டு பதவியேற்ற இவர் மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.

குறிப்பாக டோக்லாம் விவகாரத்தில் மோடி தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் ஜெய்சங்கருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இப்படி வெளியுறவுத்துறை தொடர்பான பல விஷயங்களைச் செய்த அனுபவமிக்க இவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் ஆளும் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத நிலையில் மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இவரது தேர்வால் உலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியுறவுத்துறையில் இவரது அனுபவம் மற்றும் சிறப்பான செயல்பாடுதான் அதற்குக் காரணம்.

ஜூன் 8 - 2016 "மனிதர்கள் அனைவரும் சரி சமம். என்று கூறிய ஆபிரகாம் லிங்கன் போன்றோர் பணிபுரிந்த இந்த அவையில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதில் பெரிதும் மகிழ்கிறேன்" என அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், இந்தியப் பிரதமராக மோடி உரை நிகழ்த்தினார்.

வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு கூட ஜெய்சங்கரை விடவில்லை மோடி. எதிர்க்கட்சிகளால் பெரிதாக விமர்சிக்கப்பட்ட மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று `மோடியின் 2.0' அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

- Hats of தமிழா.

Message reputation : 100% (1 vote)
SPONSORED CONTENT